Monday, 5 September 2011

பிள்ளை இல்லை

மழை பெய்த வாசலில் மண் அளைய பிள்ளை இல்லை
வழித்தரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளை இல்லை


   ன்ற பாடல் வரியை கேட்கும் போது உண்மையாகவே பிள்ளை இல்லாத குறை எவ்வளவு பெரியது என்று தெரியும்

இதனால் தான் நமது முன்னோர்கள் தாம்பத்திய வாழ்வின் மணிமகுடம் மக்கட்பேறு என்று சொன்னார்கள்

கிரீடம் இல்லாத ராஜா எப்படி மதிப்பில்லாதவனோ அதே போல குழந்தை இல்லாதவனும் மதிப்பில்லாதவனாக நமது சமூகத்தில் கருதப்படுகிறான்

குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாது

நல்ல விஷேசமாகட்டும் கெட்ட காரியங்களாகட்டும் எதிலும் இவர்களால் சகஜமாக கலந்துக் கொள்ளும் சூழ்நிலை இதுவரையிலும் கிடையாது என்றே சொல்லலாம்

பாவம் செய்தவன் தவறு செய்தவன் ஒதுக்கப்படுவது போல உறவுகளாலும் நட்புகளாலும் இத்தகைய தம்பதிகள் ஒதுக்கப்படுவது மிகவும் கண்டிக்க தக்கது ஆகும்

குழந்தைகள் இல்லையே என்று வருத்தப்படும் பெரியவர்கள் ஒருபுறம் என்றால் அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக கிடைக்கிறோமே என்று ஏங்கி தவிக்கும் குழந்தைகள் மறுபுறம் இருக்கிறார்கள்

என்னை கேட்டால் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்படுவது முட்டாள் தனமாகும்

நம் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை என்று கருதுவது அறிவீனம் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு செல்லும்
 கதையை நாளும் கேட்கிறோம்

அதனால் சுமந்து பெற முடியா விட்டால் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பது சால சிறந்ததாகும்

இருந்தாலும் உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை அல்லது பரிகாரம் ஒன்றுண்டு

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தம்பதிகள் இருவரும் தங்கியிருந்து கந்தசஷ்டி விரதம் இருங்கள்

அல்லது குழந்தை பிறந்தவுடன் குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து குழந்தையின் எடைக்கி எடை நேந்திரம் பழம் வைத்து துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள்

அதிகபச்சமாக இரண்டு வருடங்களில் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

அப்படி கிடைக்காதப் போதும் மன துணிச்சலுடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வாருங்கள்

அந்த குழந்தை உங்கள் வீட்டில் வளரும் ராசியில் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு வரும்

இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக பாவித்து அன்பு காட்டுங்கள் எல்லாம் நாராயணன் அருளால் நல்லதாக நடக்கும்.

 நான்  தத்தெடுத்து வளர்கபட்டவன்

No comments:

Post a Comment